சி.திருநாவுக்கரசு (கௌரவ ஆசிரியர்), க.பாலசுப்பிரமணியம், வ.இ.இராமநாதன், சு.லிங்கேஸ்வரன் (ஆசிரியர் குழு). கொழும்பு 2: கொழும்பு, கொம்பனித்தெரு சைவ முன்னேற்றச் சங்கம், 131, கியூ வீதி, 1வது பதிப்பு, 1970. (கொழும்பு 2: Amity Printers, 71, Justice Akbar Mawathe).
(80) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.
கொழும்பு கொம்பனித்தெரு சைவ முன்னேற்றச் சங்கத்தினரின் 16ஆவது ஆண்டு நிறைவையொட்டி 31.12.1969இல் வெளியிடத் திட்டமிட்டிருந்தபோதிலும் பல்வேறு காரணங்களால் அடுத்த ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது. இம்மலரில் வாழ்த்துப் பாமாலை (சேந்தன்-சிவன்), நாம் போற்றும் நால்வர் நெறி (காசிநாதன்), அன்புக் காணிக்கை(ஆசிரியர்கள்), ஆதரவாளர் ஆசிச் செய்திகள் (அ.சின்னத்தம்பி, த.நீதிராசா), தொண்டரணிக்காவலர் வாழ்த்து (ஸ்ரீபவன் ஸ்ரீஸ்கந்தராஜா), பாமாலை (க.கந்தசுவாமி), கந்தபுராணப் பெருமை (சி.கணபதிப்பிள்ளை), அந்தரங்க பக்தி (திருமுருக கிருபானந்த வாரியார்), செந்தில் முருகன் வருகை (கி.வா.ஜெகந்நாதன்), அன்பே சிவம் (எம்.எஸ்.தனம்), சுந்தரர் கொண்ட தோழமை (சு.கதிரவேலு), வாசகர் காட்டும் முத்திநெறி (மு.வயிரவப்பிள்ளை), தமிழ் விரகர் ஞானசம்பந்தன்: காதலர்களுக்கு நல்ல வழிகாட்டி (செ.தனபாலசிங்கம்), சுழற்காற்றிலே சமயம் (சி.சேதுகாவலர்), இவ்வாறு இறைவனை இறைஞ்சுவோம் (ம.சி.சிதம்பரப்பிள்ளை), சேக்கிழார் நாயனார் (ரமணி ராஜகோபால்), அலைகடல் பிரித்தாலும் அன்பு மறவோம் (சை.மு.ச.), சைவசமய வாழ்க்கையின் குறிக்கோள் (தி.நவநீதன்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து மாணவர் பகுதியில் மாணவர்களின் படைப்பாக்கங்களும் பரிசுபெற்றோர் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39959).