13184 பரமேஸ்வரம்: ஸ்ரீ பரமேஸ்வரன் ஆலய மகாகும்பாபிஷேக மலர் 02.06.1991.

பரமேஸ்வரம் தொண்டர்கள். யாழ்ப்பாணம்: ஸ்ரீ பரமேஸ்வரன் ஆலயம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இராமநாதன் வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1992.(அச்சக விபரம் தரப்படவில்லை).

(44), 45 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×22 சமீ.

ஆலய கும்பாபிஷேகம் 02.06.1991இல் நிறைவேறியபோதிலும், அதற்கான ஆலய கும்பாபிஷேக மலர் 20.08.1992இற்குப் பின்னதாகவே வெளிவந்துள்ளது. வாழ்த்துச் செய்திகள், ஆசியுரைகள் என்பவற்றுடன், மேற்படி ஆலய பரிபாலன சபையின் செயற்குழு அறிக்கை, இந்து மன்ற நிர்வாகக்குழு விபரம், ஆலயச் சிவாச்சாரியார்கள், பணியாளர்கள் விபரம், மகோற்சவ உபயகாரர்கள் விபரம் என்பன போன்ற ஆலயம் சார்ந்த தகவல்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. ஆங்காங்கே சில கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. பரமேஸ்வரா கல்லூரி (க.சி.குலரத்தினம்), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் இந்து மன்றமும் (ப.கணேசலிங்கம்), ஸ்ரீ பரமேஸ்வரன் ஆலய மகா கும்பாபிஷேகம் – ஒரு கண்ணோட்டம் (ஓர் அன்பர்), தமிழர் யப்பானியர் வழிபாட்டு நடைமுறைகள் (மனோன்மணி சண்முகதாஸ்) ஆகியவை அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவையாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13253).

ஏனைய பதிவுகள்

Wintingo Casino Comment and Reviews

Blogs Wintering Orchids Extra Password: Bc40ms, Mc40ms Benefits and drawbacks Away from Web based casinos In the Ontario You could potentially select from some of