கா.குகபாலன் (மலராசிரியர்). புங்குடுதீவு: அரியநாயகன்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம், இறுப்பிட்டி, புங்குடுதீவு மேற்கு, 1வது பதிப்பு, பெப்ரவரி 1989. (யாழ்ப்பாணம்: சித்திரா அச்சகம், 664, ஆஸ்பத்திரி வீதி).
(4), 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18 சமீ.
10.02.1989 அன்று நடைபெற்ற மண்டலாபிஷேக பூர்த்தியின்போது வெளியிடப்பட்ட இம்மலரின் வெளியீட்டுக் குழுவில் கா.குகபாலன், ந.பேரின்பநாயகம், ஐ.பரமேஸ்வரன், ந.சண்முகநாதன், சு.கோகிலதாசன், ம.மதியழகன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இம்மலரில் ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன், தோத்திரம் செய்யவருள்வாய் (க.நாகலிங்கம்), கும்பாபிஷேக தத்துவார்த்தம் (ஸ்ரீ இரகுநாதக் குருக்கள்), இந்து வழிபாட்டு முறைகள்-வைதிக மரபும் ஆகம மரபும் (கா.கைலாசநாதக் குருக்கள்), இலங்கையில் சைவசமயமும் மக்களும் (கா.குகபாலன்), விநாயகர் விசுவரூபம் (பொன்.அ.கனகசபை), மணிவாசகரின் தாயும் சேயும் (அ.சண்முகதாஸ்), திருக்கோயில் வழிபாட்டில் சிறப்புப் பெறும் மூர்த்தி தல தீர்த்த மரபு (ப.கோபாலகிருஷ்ணன்), முரண்பட்ட கணபதியின் உடன்பட்ட கருணை (ஈழத்துச் சிவானந்தன்), கணபதி வழிபாட்டு நெறி (சந்திரலேகா வாமதேவா), கிறீஸ்து தசாப்தத்திற்கு முன் ஈழத்தில் வாழ்ந்த பிராமணக் குலங்கள் பற்றிய கல்வெட்டுச் சான்றுகள் (சி.க.சிற்றம்பலம்), உலகை வலம்வந்த விநாயகர் (எம்.வேதநாதன்), தெய்வ சேவையே தேச சேவை (கே.ரி.கணேசன்), அரியநாயகன்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வளர்ச்சி-ஒரு நோக்கு (ந.சண்முகநாதன்) ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.