வி.சிவசாமி (தொகுப்பாசிரியர்). புங்குடுதீவு 4: ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி அம்பாள் தேவஸ்தான பரிபாலன சபை, 1வது பதிப்பு, ஜுலை 2005. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டேர்ஸ், 56, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
(10), 88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.
03.07.2005 அன்று நடைபெற்ற மண்டலாபிஷேக பூர்த்தியின்போது வெளியிடப்பட்ட இம்மலரில் அருளுரைகள், ஆசியுரைகள், வாழ்த்துரைகள் ஆகியவற்றுடன் அன்னையின் திருப்பணியில் (தேவஸ்தான பரிபாலன சபை), முன்னுரை (வி.சிவசாமி), ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி தோத்திரமாலை/ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி அநுபூதி/ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி பஜனை (சீ.வினாசித்தம்பி), ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி கீர்த்தனை (ஓர் அடியான்), அன்னை பாமாலை (என்.ருபேந்திரன்), காளிகா பரமேஸ்வரி ஊஞ்சல் பாக்கள், கும்பாபிஷேக முறைகளும் விளக்கமும் (நயினை ஐ.கைலாசநாதக் குருக்கள்), ஆலயத்தில் நிகழும் கும்பாபிஷேகமும் நாமும் (ப.கோபாலகிருஷ்ண ஐயர்), பிட்டியம்பதி ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி ஆலய வரலாறு-ஒரு கண்ணோட்டம் (வி.சிவசாமி), பிட்டியம்பதி ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம் (ஸ்ரீ நிவாஸ நாகேந்திரக் குருக்கள், சி.க.நல்லையா), காளியம்மன் வழிபாடு: ஒரு வரலாற்று நோக்கு (வி.சிவசாமி), இறவாத இன்ப அன்பு (இ.குமாரவடிவேல்), நான் விரும்பிய காளி தருவாள் (மனோன்மணி சண்முகதாஸ்), அன்னையின் அருள் (பெ.திருஞானசம்பந்தன்), சக்தி தத்துவம் (பொ.அ.கனகசபை), ஆலய அமைப்பு (மு.கந்தையா), கோபுரம் ஒரு நோக்கு (நா.தயானந்த்), மகா கும்பாபிஷேகப் படங்கள், தேவஸ்தான நித்திய பூசைகள், மகோற்சவம், ஏனைய திருவிழாக்கள் ஆகிய விடயதானங்கள் இடம்பெற்றுள்ளன.