கோபாலபிள்ளை நாகேஸ்வரன் (மலராசிரியர்). வவுனியா: பரிபாலன சபை, குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தானம், குட்செட் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2001. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).
160 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.
வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் மகா கும்பாபிஷேகம் 03.06.2001 அன்று நடந்ததுடன், 17.7.2001 அன்று ஆலய மண்டலாபிஷேக வைபவமும் பூர்த்திசெய்யப்பட்டது. இவ்விரு நிகழ்வினையும் ஒட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இதுவாகும். அறிக்கைகள், ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன் இம்மலரில் ஆலய வரலாறு ஒரு கண்ணோட்டம் (பரிபாலன சபை), திருவூஞ்சற் பா (செ.குணபாலசிங்கம்), குடமுழுக்கின் தத்துவம் (முத்து ஜெயந்தி நாதக் குருக்கள்), மஹா கும்பாபிஷேகத்தில் தத்துவசோதனம் (தா.மகாதேவக் குருக்கள்), நித்திய பூசையும் அதன் தத்துவமும் (மு.பரமசாமிக்குரு முத்துக்குமாரசாமிக் குருக்கள்), கருணை புரியும் கருமாரி அம்மன் (தி.இராசசேகரக் குருக்கள்), சிவசக்தி (பொன்.தெய்வேந்திரன்), சிவலிங்க வழிபாடும் தனிச்சிறப்பும் (ச.பரணிதர சர்மா), அன்னை சக்தியும் ஆருயிர்த் தாயும் (வை.இ.எஸ்.காந்தன் குருக்கள்), உற்சவம், குருபக்தி (ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள்), கோபுர தரிசனமும் அதன் மகத்துவமும் (தர்மலிங்கக் குருக்கள் நாகேஸ்வர சர்மா), அம்பிகையின் அருள் (சுழிபுரம் மாதவர் மார்க்கண்டு), ஆலய வழிபாடு ஏன் எதற்கு எப்படி (மெய்கண்டதாசன்), அண்ணலார் அருளே அம்பாள் திருவுருவம் (சிவசண்முக வடிவேல்), உபசாரம் (வே.சரணியபுரீஸ்வரக் குருக்கள்), அவள் வண்ணவண்ணம் அவர் வண்ணவண்ணம் (முருக வெ.பரமநாதன்), சக்தி விரதங்கள் (க.கேசவக் குருக்கள்), அர்ச்சனை, கேதார கௌரி விரதம், தேசிக்காய் விளக்கின் மகிமை, திருவிளக்கு வழிபாடும் அதன் மகிமையும் (சுவேந்திரா சந்திரகரன்), காயமே கோயிலாகும் (கோபாலப்பிள்ளை நாகேஸ்வரன்), காயத்ரி மந்திரம் (கோ.மதியழகன்), ஈழத்தில் அம்பிகை வழிபாட்டு மரபில் வன்னிப் பிராந்தியம் (நடேசப்பிள்ளை ஞானவேல்), சிவமயம், சத்தியசாயிபாபா அருள்மொழிகள் (ஆ.குமாரசிங்கம்), கவிதை (ஞானக் கவிமணி), ஆலய வழிபாடும் ஆத்மீக வழிபாடும் (பார்வதி கண்மணிதாசன்), அம்பிகைக்கு கும்பாபிஷேகம் அடியார்க்கு சந்தோஷம் (பிருந்தா சந்திரகரன்), சக்தி எமக்கின் சாந்தியை நல்கு (வை.இ.எஸ்.பிரதாசக்தி), ஆன்ம ஈடேற்றம் குறித்த சித்தாந்தம் (சி.கந்தகுமாரன்) ஆகிய படைப்பாக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28322).