13199 இந்து மதம் என்ன சொல்கிறது: பாகம் 5: ஒன்பதாம் திருமுறையின் மகத்துவம்.

திருமதி. ஞானம் ஞானசேகர ஐயர். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).

viii, 158 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-8354-82-7.

ஒன்பதாம் திருமுறை என்பது சைவத் திருமுறைகள் வைப்பினிலே திருமாளிகைத் தேவர் உட்பட 9 பேர் பாடிய பாடல்களை உள்ளடக்கியுள்ளது. இதில் 303 பாடல்கள் அடங்கியுள்ளன. இத் திருமுறையிலுள்ள பாடல்கள் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என இரண்டு வகையாகப் பார்க்கப்படுகின்றன. இந்நூல் ஒன்பதாம் திருமுறையின் மகத்துவத்தை விளக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. மகத்துவம் பொருந்திய திருமுறைகள், ஒன்பதாம் திருமுறையின் சிறப்பு, ஒன்பதாம் திருமுறை அருளிய அருளாளர்கள் ஆகிய மூன்று இயல்களில் எழுதப்பட்டுள்ளது. அருளாளர்களாக திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த் தேவர், பூந்துருத்திநம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலி அமுதனார், புருடோத்தமநம்பி, சேதிராயர், சேந்தனார் ஆகியோர் பற்றி இந்நூலில் ஆசிரியர் குறிப்பிட்டு அவர்களது சில பாடல்களை நயந்துள்ளார். இது ‘இந்துமதம் என்ன சொல்கிறது?’ என்னும் தொடரில் வெளிவந்துள்ள ஆசிரியரின் 5ஆவது நூல். 49ஆவது ஞானம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Best $1 Put Online casinos inside 2025

Articles Banking Alternatives Simple tips to allege the gambling enterprise added bonus What about Genie Wild Position Volatility And you may RTP? Twist Gambling establishment

13A18 – நலமுடன்.

எஸ்.சிவதாஸ். வவுனியா: வவுனியா மனநலச் சங்கம், மனநலப் பிரிவு, மாவட்டப் பொது வைத்தியசாலை, 4வது திருத்திய பதிப்பு, 2013, 1வது பதிப்பு, ஏப்ரல் 2005. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது