13200 இந்து மதம் என்ன சொல்கிறது: பாகம் 6: யாவர்க்குமாம் வாழ்வுநெறி.

திருமதி. ஞானம் ஞானசேகர ஐயர். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xiv, 132 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-8354-90-2.

எமக்குக் கிடைத்துள்ள இவ்வரிய மானிடப் பிறவியை எவ்வாறு வாழலாம், வாழ்வாங்கு வாழ்வதற்குரிய முறைகள் எவையெவை அவற்றினை எங்ஙனம் ஒழுகுதல் வேண்டும் என்பன போன்ற பல ஆலோசனைகளை இச்சைவ சமயவாழ்வியல் நூல் வழங்குகின்றது.  பிறவாயாக்கைப் பெரியோன், விநாயகப் பெருமான் வழிபாட்டியல், பொய்யாமொழி-ஒரு ஞானநூல், யாம் செய்யத் தக்கவை, சிற்றறிவு-பேரறிவு, வாழ்வுநெறி ஆகிய ஆறு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இது ‘இந்துமதம் என்ன சொல்கிறது?’ என்னும் தொடரில் வெளிவந்துள்ள ஆசிரியரின் 6ஆவது நூல். 60ஆவது ஞானம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளது. கலாபூஷணம் திருமதி ஞானம் ஞானசேகர ஐயர் மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் (கண்டி), ஆசிரிய ஆலோசகராகவும் இந்து சமயபாட முன்னாள் இணைப்பாளராகவும் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்

Play Book Of Ra Slot

Content Dark carnivale Slot Free Spins – Ein Gegensatz Zur Grundversion Book Of Ra Magic Book Of Ra Deluxe Online Tora A Glance Book Of