செல்வம் கல்யாணசுந்தரம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: திருமூலர் சங்கம், இல.3, ரிட்ஜ்வே பிளேஸ், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 12: மக்லீன் பிரின்டர்ஸ், 234, டாம் ஸ்ட்ரீட்).
18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.
திருமூலர் அல்லது திருமூல நாயனார் சேக்கிழார் சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட 63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவருமாவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். இவர் வாழ்ந்த காலம் ஐந்தாவது நூற்றாண்டு. இவர் அருளிச்செய்த நூல் திருமந்திரமாலையாகும். இது 3000 பாடல்களைக் கொண்டது. இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர். திருமந்திரத்தில் இருதய நோயைத் தடுக்கும் வழிகளைப் பல திருமந்திரங்களில் கூறியுள்ளார். அந்நோய்க்குச் செய்யவேண்டிய சிகிச்சைகளையும் பல பாடல்களில் திருமூலர் விளக்கியுள்ளார். யமனின் சடுதிப் பிரவேசத்தைப் பற்றியும் அதைத் தடுக்கும் முறைகளைப் பற்றியும் கூறியிருக்கும் விடயங்களைத் தொகுத்து விளக்கும் நோக்கில் கொழும்பு திருமூலர் சங்கத்தினர் இந்நூலை வெளியிட்டுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pam414).