சு.கனகரத்தினம். கொழும்பு 13: வைத்திய கலாநிதி சு.கனகரத்தினம், 82/112, ஸ்ரீ இராமநாதன் வீதி, 1வது பதிப்பு, 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை).
72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
வாழ்க்கையில் நிம்மதியைத் தேடி அலைகின்ற மக்களுக்குச் சிறிதளவேனும் நிம்மதியைத் தரக்கூடியதாக தமிழ் வேதமான பன்னிரு திருமுறைகளில் தேர்ந்த சில பாடல்களையும் திருமுறைகள் பற்றிய சில கருத்துரைகளையும், வள்ளலாரின் திருவருட் பாக்களையும், சில அருளாளர்களின் பாடல்களையும் தேர்ந்து சேர்த்துத் தந்துள்ளார். பட்டினத்தார், பாம்பாட்டிச் சித்தர், வால்மீகிச் சித்தர், சிவவாக்கியர், தாயுமானவர், இராமலிங்கர் ஆகியோர் பாடிய பாடல்களின் அருந்தொகுப்பும், அவர்கள் பற்றிய தொகுப்பும், சித்திரமுத்தன் அடிகளின் சிந்தனைகள் சிலவும் இடம்பெற்றுள்ளன. இறுதியாக மதத்தின் உண்மை விளக்கம் கூறும் புதிய சிந்தனைகள் சிலவும் இணைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24930).