ஞானம் பாலச்சந்திரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (மஹரகம: தரஞ்ஜீ பிரின்டர்ஸ், 506, ஹைலெவல் வீதி, நாவின்ன).
xxviii, 204 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-8354-85-8.
இன்று கிடைத்தற்கரியதாயுள்ள பல நூல்களைத் தேடியெடுத்து, ஆராய்ந்து உருத்திராக்கம் பற்றிய பல அபூர்வ விடயங்களை இந்நூல் தொகுத்துத் தருகின்றது. உருத்திராக்கம் பற்றிய பல சமயச் செய்திகளையும், அச்செய்திகள் பதிவாகியிருக்கின்ற நூல்களின் விபரங்களையும், இன்றைய உலகில் உருத்திராக்கம் கிடைக்கும் இடங்களையும், உருத்திராக்க மணி அதன் மரத்திலிருந்து பெறப்படும் முறையையும், அதன் வடிவ வகைகளையும் உருத்திராக்கத்தில் பொதிந்துள்ள சூக்கும சக்திகள் பற்றிய விபரங்களையும் அச்சக்திகளால் பெறப்படும் பயன்கள் பற்றியும் இந்நூல் விபரிக்கின்றது. உருத்திராக்கம் பற்றிக் கூறும் நூல்கள், உருத்திராக்கத்தின் தோற்றம், உருத்திராக்கத்தின் வடிவம், சூக்கும சக்தி, முகங்களின் எண்ணிக்கை, ஒரு முகி, இரு முகி, மூன்று முகி, நான்கு முகி, ஐந்து முகி, ஆறு முகி, ஏழு முகி, எட்டு முகி, ஒன்பது முகி, பத்து முகி, பதினொரு முகி, பன்னிரண்டு முகி, பதின்மூன்று முகி, பதின்நான்கு முகி, பதின்நான்கு முகிக்கு மேல், சிறப்பு வடிவ உருத்திராக்கங்கள், உருத்திராக்க மாலைகள், உருத்திராக்க மாலைகள் கட்டும் விதம் ஆகிய 23 இயல்களில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. இது 54ஆவது ஞானம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளது.