திருச்செல்வம் தவரத்தினம் (பதிப்பாசிரியர்). காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, நவம்பர் 2017. (யாழ்ப்பாணம்: ஆரணன் பிறின்ரேர்ஸ், மருதனார்மடம்).
(2), 30 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 18×12.5 சமீ.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்திருக்கும் சபரிமலை ஐயப்பனின் அடியார்கள் ஈழத்திலும் பரவலாகியுள்ளனர். ஐயப்ப பக்தர்கள், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சனிக்கிழமை, உத்தர நட்சத்திரம் அல்லது கார்த்திகை முதல் நாள் மாலை அணிந்து விரதத்தை ஆரம்பித்து 41 நாட்கள் மார்கழிக் கடைசி நாள் வரை தமது விரதத்தை எண்ணம், சொல், செயல் ஆகியவற்றால் பக்தி வைராக்கியத்துடன் கடைப்பிடிப்பர். இவ்விரதத்தைக் கடைப்பிடிக்கும் வேளைகளில் பயன்படும்பொருட்டு ஐயப்பன் பாமாலை இங்கு நூலுருவில் வெளியிடப்பட்டுள்ளது.