ஆறுமுக நாவலர் (உரையாசிரியர்), பொன்னம்பலபிள்ளை (பதிப்பாசிரியர்). கொழும்பு 7: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை, 4, ஹோட்டன் ரெறஸ், 1வது பதிப்பு, ஜுலை 1981. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சகம்).
xvi, 568 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19சமீ.
சமஸ்கிருதத்திலிருந்து கச்சியப்ப சிவாச்சாரியாரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கந்தபுராணத்திற்கான எளிமையான உரையாக ஆறுமுகநாவலரால் எழுதப்பட்ட ‘கந்தபுராண வசனம்’ அமைந்துள்ளது. அவருக்குப் பின்னர் ஆறுமுக நாவலர் சபை 1981 ஆம் ஆண்டில் அந்த நூலைப் பதிப்பித்திருந்தது. இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களின் அணிந்துரையுடன் கூடியது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 03006).