கச்சியப்ப சுவாமிகள் (மூலம்), வே.சிதம்பரம்பிள்ளை (உரையாசிரியர்), தி.செல்வமனோகரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, மீள்பதிப்பு, 2018, 1வது பதிப்பு, 1938. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
xxiv, 392 பக்கம், விலை: ரூபா 1250., அளவு: 24.5×17 சமீ., ISBN: 978-955-9233-53-4.
கந்தனது பெரும்புகழ் பேசும் நூல் கந்தபுராணமாகும். அப்புராணம் சித்தாந்தப் பொருள் நிறைந்த சைவபுராணமாகும். கந்தசஷ்டித் தினங்களாகிய ஆறு நாட்களிலும், சுப்பிரமணியப் பெருமான் சூரபன்மனாகிய ஆணவமலத்தின் வேகத்தைத் தணித்து அந்த ஆன்மாவுக்கு அருள்பாலித்தார். அந்த அற்புதமான கதை கந்தபுராணத்திலே சூரபன்மன் வதைப்படலத்தில் அழகாகக் கூறப்பட்டுள்ளது. இந்நூலில் செய்யுள்களை இலக்கண விதிப்படி புணர்த்திப் பதிப்பதனால் வாசிப்பதில் மக்களுக்கு ஏற்படும் இடரை நீக்கவிரும்பி கூடியவரையில் புணர்ச்சி பிரித்து உரையாசிரியர் யாழ்ப்பாணம், மேலைப்புலோலி ஸ்ரீமத் வே.சிதம்பரப்பிள்ளை அவர்கள் விளக்கியுள்ளார்.