கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் (மூலம்), ச.சுப்பிரமணிய சாஸ்திரிகள் (விருத்தியுரை). பருத்தித்துறை: ஸ்ரீ ச.சோமசுந்தர ஐயர், கலாநிதி யந்திரசாலை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை).
(66), 64 பக்கம், விலை: 35 சதம், அளவு: 24×16 சமீ.
கந்தபுராணத்தில் யுத்தகாண்டம் என்பது போர் நிகழ்ச்சியைக் கூறும் காண்டமெனப் பொருள்படும். முருகக் கடவுள் யுத்த சன்னதராய்ச் சென்று சூரபன்மன் முதலிய அசுரர்களை அழித்து தேவரைச் சிறைமீட்டமை இக்காண்டத்தில் விரித்துக் கூறப்பட்டுள்ளது. இந்நூலுக்கான விருத்தியுரையை பகுதி பகுதியாகச் சஞ்சிகை உருவில் எழுதி சந்தாதாரர்களுக்கு வழங்கிவந்தவர் யாழ்ப்பாணம் பருத்தித்துறை தும்பை நகரைச் சேர்ந்த பிரம்மஸ்ரீ ச.சுப்பிரமணிய சாஸ்திரிகளாவார். இவர் ஒரு சமஸ்கிருத, திராவிட பண்டிதரும், பிரபல சோதிட கணித சித்தாந்தியும், வித்தியாவிருத்தித் தருமகர்த்தருமாவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 02442).