அருணகிரிநாதர் (மூலம்), மு.திருவிளங்கம்; (உரையாசிரியர்), ஸ்ரீபிரசாந்தன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
ix, 130 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12 சமீ., ISBN: 978-955-9233-64-0.
முருகனடியார்களுள் சிறப்பிடம்பெறும் அருணகிரிநாதர் அருளிச்செய்த நூல்களுள் ஒன்றான கந்தரலங்காரம் பாராயணப் பயன்பாட்டுச் சிறப்புடையது. பக்திச் சுவையுடன் சொற்சுவை, பொருட்சுவை, சந்தச் சிறப்பு என்பவையும் நிரம்பியது. இச்சிறப்புமிகு நூலுக்கு ஈழத்துச் சைவசித்தாந்த அறிஞர் மு.திருவிளங்கம் அவர்கள் எழுதிய விளக்கவுரை இதுவாகும். சைவசித்தாந்த தத்துவ அடிப்படையில் கந்தரலங்காரத்திற்கு எழுதப்பெற்ற இவ்வுரையானது சமய, தமிழ் உலகில் மிகவும் புகழ்பெற்றது. இந்நூல் 2018இல் மலேசிய திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் நான்காவது அனைத்துலக முருகபக்தி மாநாட்டினையொட்டி கொழும்பில் அச்சுருவில் மீள்பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.