13225 சிவமந்திரம்-சிவவாசகம்-சிவகோவை.

சுவாமி உமாஷங்கரானந்த சரஸ்வதி ஷிஓம்ஷர். கொழும்பு 6: மௌனாஷ்ரம் அறக்கட்டளை, இல. 19, ஐ.பீ.சீ. வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜுன் 1993. (கொழும்பு 12: ஸ்ரீ சக்தி பிரின்டிங் இன்டஸ்ட்ரீஸ், 61, 1/F, பீர் சாயிபு வீதி).

(6), 97 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

இந்நூல் பார்வதி சமேதராய் உள்ள பரமேஸ்வரர் என்னும் பரம்பொருள் மீது பாடப்பெற்ற சிவமந்திரம், சிவவாசகம், சிவகோவை என்பனவற்றை உள்ளடக்கியுள்ளது. எழிற்சி, சிவவாசகம் (சிவ வாழ்த்து, சிவ போற்றி, சிவகுரு வருகை, சிவகுரு மகிமை, சிவகுரு காட்சி, சிவஞான விழிப்பு, சிவஞானச் செல்வம், சிவகுரு சரணம், சிவஞானக் கேள்வி, சிவமாதல்), சிவகோவையார், சிவமந்திரம் (இறைதுதி – முதுநிலை, சிவநிலை, நிர்விகல்ப சமாதி, போதனை-வெளிப்பாடு, புலப்பாடு குருவிழி,  வினைநிலை, வழியாகுதல், பொதுமை-ஆளுமை, பிறப்பு, அன்பு, எழுத்து, வேதநிலை-விசாரம், சமம், சமாதானம், தமம், உபரதி திதிட்சை, சிரத்தை, சிரவணம், மனனம், பிரசங்கியானம், சித்தநிலை) ஆகிய பிரிவுகளில் செய்யுட்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13544).

ஏனைய பதிவுகள்

17514 இறையடி இணைமாலை.

இரா.கிருஷ்ணபிள்ளை (புனைபெயர்: இராகி), இராகி. இளம்குமுதன் (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: மலரகம், நடராஜானந்தா வீதி, காரைதீவு-2, 1வது பதிப்பு, 2023. (மட்டக்களப்பு: துர்க்கா அச்சகம், கொக்குவில்). (6), 71 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 20.5×14.5