ஸ்ரீவிசுவாம்பா விசாலாட்சி மாதாஜி. பேலியகொட: ஸ்ரீ பூபால விநாயகர் ஆலயம், 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
(4), 122 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 17×12 சமீ.
சிவனுக்குரிய முக்கிய விரதங்களாக சோமவார விரதம்- திங்கள், உமாமகேஸ்வரர் விரதம்- கார்த்திகை பவுர்ணமி, திருவாதிரை விரதம்- மார்கழி, சிவராத்திரி விரதம்- மாசி, கல்யாணவிரதம்- பங்குனி உத்திரம், பாசுபத விரதம்-தைப்பூசம், அஷ்டமி விரதம்-வைகாசி பூர்வபட்ச அஷ்டமி, கேதார விரதம்-தீபாவளி அமாவாசை என்பன குறிப்பிடப்படுகின்றன. சைவர்களால் சிவனை வழிபாடு செய்யப்படும்போது உச்சரிக்கத் தக்க பஞ்சதோத்திரங்களை இங்கு பேலியகொட ஸ்ரீ பூபால விநாயகர் ஆலயத்தின் ஆஸ்தானப் புலவர் தவத்திரு ஸ்ரீ விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அவர்கள் இயற்றி வழங்கியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33189).