குமாரசாமி சோமசுந்தரம். கொழும்பு 6: ரஜி வெளியீடு, 73, 2/1, விகாரை லேன், 1வது பதிப்பு, டிசம்பர் 1993. (கொழும்பு: பசிபிக் அச்சகம்).
(8), 99 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 20.5×14 சமீ.
இந்நூலில் விநாயகர் மகிமை, மனிதனின் மாண்பு, திருக்கோயில் வரலாறு, இறைவன் திருக்குறிப்பு, நம்பிக்கையின் பலம், சேவல் கூவல், அழகே செம்மை, பிரார்த்தனை, நல்லொழுக்கம், ஆறுமுகமான பொருள், சைவநீதி, வெள்ளிக்கிழமை விரதம், முருகத்துவம், துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி, நாலுபேர் சென்ற வழி, உலக ஒழுங்கு நிர்வாகம், நீதியே சிவம், உயிரோம்புதல், பற்றுக்கள், தூய உள்ளம், பணிதல் எனும் பலம், சைவப் பழக்கவழக்கம், செய்நன்றியறிதல், அன்பே சிவம், ஈதல் அறம், நா காக்க, வணக்கத்திற்குரியவர்கள், நற்றுணை, யாவும் சிவன் செயல், திருநீறு, மனிதமனத்தினர், அமைதிபேணல், தீவினை செய்ய அஞ்சுதல், ஏற்பதிகழ்ச்சி, சைவ மரபு, தமிழர் வாழ்வு, உலக ஒழுக்கம், உள்ள அழகு, வாழ்வியல் பரிவர்த்தனை ஆகிய 41 தலைப்புகளில் எழுதப்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் தேசிய கல்வி நிறுவகத்தில் தமிழ்த்துறைப் பணிப்பாளராகப் பணியாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14367).