மலர்க் குழு. கொழும்பு 13: திருமதி தியாகராஜா, 121,பெனடிக்ற் மாவத்தை, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு: மெய்கண்டான் அச்சியந்திரசாலை, 161, செட்டியார் தெரு).
(2), 162 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
அமரர் கனகசபை தியாகராஜா (3.4.1930-19.11.1993) அவர்களின் நினைவாக வெளியிடப்பட்டுள்ள இந்நினைவு மலரில், அன்னாரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளுடன் சைவ சமய பக்தி இலக்கியப் பாக்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அப்பர்-சுந்தரர்-சம்பந்தர் தேவாரங்கள், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம், திருமந்திரம், திருப்புகழ், விநாயகர் கவசம், திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, அபிராமி அந்தாதி, அபிராமி அம்மைப் பதிகம், கந்தரனுபூதி, கந்தர் கலிவெண்பா, கந்தரலங்காரம், திருநள்ளாற்றுப் பதிகம், கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம், திருக்கேதீச்சரப் பதிகம், திருக்கோணேஸ்வரப் பதிகம், பறாளாய் முருகமூர்த்தி புகழ், முத்துவிநாயகர் பஞ்சகம், பொன்னம்பலவாணேசர் பஞ்சகம், வரதராஜ விநாயகர் பஞ்சகம், முத்துமாரி அம்மை பஞ்சகம், சிவபுராணம், மதுரை மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ், திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ் ஆகிய பாவகைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14231).