சபாபதி மகேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). லண்டன் ளுநு 13 5நுளு : சபாபதி மகேஸ்வரன், லூஷியம் சிவன் கோவில், 4A Clarendon Rise, Lewisham, 1வது பதிப்பு, மார்ச் 2015. (லண்டன்: நெட் பிரின்டர்ஸ்).
48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
லண்டனில் ஓய்வுபெற்ற பொறியியலாளரான சபாபதி மகேஸ்வரன் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள பஞ்சபுராணத்திரட்டு இதுவாகும். விநாயகர் துதி, விநாயகர் அகவல், திருமுறை அர்ச்சனைப் பாடல்கள், 15 தினங்களுக்கு ஓதக்கூடியவகையில் தொகுக்கப்பெற்ற பஞ்சபுராணம் (தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்), அபிராமி அந்தாதி, திருப்புகழ் என்பனவும், திருமால் துதி, திருமால் வழிபாடு 108 போற்றி என்பனவும் அடியார்கள் வசதி கருதி இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.