சிவ மகாலிங்கம். கோண்டாவில்: சிவ.மகாலிங்கம், சிவஜோதி, பொற்பதி வீதி, கோண்டாவில் கிழக்கு, 1வது பதிப்பு, மே 2018. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்டர்ஸ், பலாலி வீதி).
60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
கலாபூஷணம் சிவ.மகாலிங்கம் அவர்கள் இந்து சாதனம் பத்திரிகையில் 17.08.2010 முதல் 14.06.2013 வரையிலான காலகட்டத்தில் எழுதிய பதினாறு கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. குப்பிழான் கற்பக விநாயகர் ஆலயம், நாவும் நல்வாழ்க்கையும், மூவகைப் பலம், வாக்கும் வாழ்வும், அன்பின் வலிமை, அறவாழ்வின் அவசியம், திருத்தொண்டு நெறி, வாழ்வில் நிதானம், பக்தி மார்க்கமே பரமனடி காட்டும், மானிடப் பிறவியின் மாண்பு, அருளியலும் அறிவியலும், திருவிழாவும் அன்னதானமும், தானங்களில் உயர்ந்தது, தெய்வங்களாகி, காலம் நம் கையில் கட்டுண்டு கிடவாது, பிரார்த்தனை ஆகிய தலைப்புகளில் இவ்வான்மீகக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.