அருணாசலம் ஸ்கந்தராஜ். கொழும்பு 4: அருணாசலம் ஸ்கந்தராஜ், 15, பரீட் பிளேஸ், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xvi, 128 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-38573-2-3.
அமரர் திருமதி மங்கையற்கரசி அருணாசலம் (13.12.1922-31.03.2016) அவர்களின் நினைவாக வெளியிடப்பட்ட நூல். அர்ஜுன விஷாத யோகம், சாங்கிய யோகம், கர்ம யோகம், ஞான யோகம், கர்மசந்நியாச யோகம், ஆத்மசம்யம யோகம், விஞ்ஞான யோகம், அஷ்ர பரபிரம யோகம், ராஜவித்தியா ராஜகுஹ்ய யோகம், விபூதி யோகம், விஸ்வரூப தரிசன யோகம், பக்தி யோகம், சேத்திர சேத்ரஜ்ஞ விபாக யோகம், குணதிரய விபாக யோகம், புருஷோத்தமப் பிராப்தி யோகம், தைவாசுர சம்பத் விபாக யோகம், ஸ்ரத்தா திரய விபாக யோகம், மோட்ச சந்நியாச யோகம் ஆகிய 18 அத்தியாயங்களில் இவ்விரிவுரை வழங்கப்பட்டுள்ளது. அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ண பகவானை விளித்த நாமங்களும் விளக்கமும், ஸ்ரீகிருஷ்ண பகவான் அர்ஜுனனை விளித்த நாமங்களும் விளக்கமும், சொல் அகராதி ஆகிய மூன்றும் பின்னிணைப்புகளாகத் தரப்பட்டுள்ளன.