கைலைமணிவேல் சுவாமிநாதன் (தொகுப்பாசிரியர்). அச்சுவேலி: இந்து நெறிக் கழகம், இடைக்காடு, 1வது பதிப்பு, 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).
iv, 35 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×14 சமீ.
இந்நூலில் பஞ்சாட்சரப் பதிகங்களும் சிவபுராணமும் உரையுடன் வெளியிடப்பட்டுள்ளன. திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அருளிய துஞ்சலும் துஞ்சல் இல்லாத… என்ற பதிகமும், காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி… என்ற பதிகமும், திருநாவுக்கரசு நாயனார் அருளிய சொற்றுனை வேதியன் என்ற பதிகமும், சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய மற்றுப்பற்றெனக்கிங்கு… என்ற பதிகமும், மாணிக்கவாசக சுவாமிகள் பாடியருளிய சிவபுராணமும் உரை விளக்கத்துடன் இங்கு இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pma-4758).