13248 மறைசையந்தாதி.

சின்னத்தம்பிப் புலவர் (மூலம்), உடுப்பிட்டி அ.சிவசம்புப் புலவர் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையினர், 2வது பதிப்பு, பவ வருடம் ஆடி 1934. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை).

(9), 56 பக்கம், விலை: சதம் 30., அளவு: 20×12.5 சமீ.

நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் ஒரு தடவை சிதம்பரம், வேதாரண்யம் முதலாய புண்ணியதலங்களுக்கு யாத்திரை மேற்கொண்ட காலகட்டத்தில்  வேதாரணியத்தில் எழுந்தருளியிருக்கும் வேதாரணியேசுவரர் மேற் பாடப்பட்ட அந்தாதி. இவ்வந்தாதிக்குச் சிறப்புப் பாயிரமாக வழங்கும் செந்தா தியன்மணி என்னுஞ்செய்யுள் சுன்னாகம் வரதபண்டிதராற் (வரதராச கவிராயர்) பாடப்பெற்றதென்பர். இவ்வரதபண்டிதர் இயற்றிய சிவராத்திரி புராணத்திற்கு சிறப்புப்பாயிரத்தை சின்னத்தம்பிப் புலவர் எழுதியிருந்தார். இந்நூலில் நூலாசிரியர் வரலாறும் சேர்க்கப்பட்டுள்ளது. (ஆறுமுகநாவலர் பதிப்பு நூல்தேட்டம் பதிவிலக்கம் 5493). (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 41199. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 011204).

ஏனைய பதிவுகள்