ஞாபகார்த்தக் குழு. கொழும்பு 13: காரைநகர் அமரர் திருமதி சி.நாகம்மா அம்மையார் ஞாபகார்த்த வெளியீடு, 276, ஸ்ரீ இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை, 1வது பதிப்பு, பெப்ரவரி 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை).
ix, 206 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.
காரைநகர், விளானையைச் சேர்ந்த அமரர் திருமதி சி.நாகம்மா அம்மையார் இறைபதமெய்தியதன் நினைவாக 24.02.1999 அன்று நடைபெற்ற அவரது மறைவின் 31ஆம் நாள் நிகழ்வினையொட்டி இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. மாணிக்கவாசக சுவாமிகள் பாடியருளிய திருவாசகத்தின் 51 திருப்பதிகங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் மொத்தம் 658 பாடல்கள் அடங்கியுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24226).