மாணிக்கவாசக சுவாமிகள் (மூலம்), இராசையா ஸ்ரீதரன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: இராசையா ஸ்ரீதரன், 291, நாவலர் வீதி, ஆனைப்பந்தி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2006. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).
iv, 156 பக்கம், விலை: ரூபா 225., அளவு: 20.5×14.5 சமீ.
இந்நூலில் சிவபுராணம், கீர்த்தித் திரு அகவல், திரு அண்டப் பகுதி, போற்றித் திருஅகவல், திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை, திருவம்மானை, திருப்பொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தௌ;ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்தோணோக்கம், திருப்பொன்னூசல், அன்னைப்பத்து, குயிற்பத்து, திருத்தசாங்கம், திருப்பள்ளியெழுச்சி, கோயில் மூத்த திருப்பதிகம், கோயிற்றிருப்பதிகம், செத்திலாப்பத்து, அடைக்கலப்பத்து, ஆசைப்பத்து, அதிசயப்பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, திருக்கழுக்குன்றப் பதிகம், கண்டபத்து, பிரார்த்தனைப் பத்து, குழைத்த பத்து, உயிருண்ணிப் பத்து, அச்சப் பத்து, திருப்பாண்டிப் பதிகம், பிடித்த பத்து, திருவேசறவு, திருப்புலம்பல், குலாப்பத்து, அற்புதப்பத்து, சென்னிப்பத்து, திருவார்த்தை, எண்ணப்பதிகம், யாத்திரைப்பத்து, திருப்படையெழுச்சி, திருவெண்பா, பண்டாய நான்மறை, திருப்படையாட்சி, ஆனந்த மாலை, அச்சோப்பதிகம் ஆகிய 51 பதிகங்கள் இங்கு தொகுத்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. ஈற்றில் பாட்டு முதற்குறிப்பகராதியும் வழங்கப்பட்டுள்ளது.