வில்லிபுத்தூராழ்வார் (மூலம்), வ.குமாரசுவாமிப் புலவர் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: க.வேற்பிள்ளை, வண்ணார்பண்ணை மேற்கு, 1வது பதிப்பு, மார்கழி 1899. (யாழ்ப்பாணம்: க.வேற்பிள்ளை, விவேகானந்த யந்திரசாலை, வண்ணார்பண்ணை மேற்கு). (5), 232 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 24.5×16 சமீ. ஆறுமுக நாவலருக்கும், சைவசிரோன்மணி ந.ச.பொன்னம்பலபிள்ளையவர்களுக்கும், உடுப்பிட்டி சிவசம்புப் புலவரவர்களுக்கும் மாணாக்கரும், அனந்தபுரத்து மகாராஜா காலீஜில் தமிழ்-சமஸ்கிருத பண்டிதர் கணபதிப்பிள்ளையவர்களுக்குச் சகோதரரும், மாணாக்கருமாகிய, யாழ்ப்பாணம் பருத்தித்துறை சார்ந்த புலோலி ஸ்ரீ வ. குமாரசுவாமிப் புலவரவர்கள் செய்த புத்துரையுடன் கூடியதாக வெளிவந்துள்ள நூல் இது. சபாபருவம், இராசசூயச் சருக்கம், சூது போர்ச் சருக்கம் ஆகிய மூன்று பிரிவுகளில் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 314).