13256 யாழ்ப்பாணத்து நல்லைக் கந்தன் பாமாலை.

மு.க.சூரியன். கோப்பாய்: கவிஞர் மு.க.சூரியன், கோப்பாய் தெற்கு, 2வது பதிப்பு, ஆவணி 1970, 1வது பதிப்பு, ஆவணி 1968. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம்).

29 பக்கம், விலை: 50 சதம், அளவு: 21×13.5 சமீ.

யாழ்ப்பாணம் அரஸ்கோ நிறுவனத்தின் உரிமையாளரான இ.அரசரத்தினம் அவர்களின் நிதி ஆதரவுடன் இலவச வெளியீடாக  21.8.1968இல் நல்லூர்க் கந்தசுவாமி கோவிலில் ஸ்ரீமுருகன் தண்ணீர்ப் பந்தலில், நல்லை ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாதத் தம்பிரான் சுவாமிகளின் முன்னிலையில் முதற் பதிப்பைக் கண்ட இந்நூலின் ஆசிரியர் ஏற்கெனவே கதிரேசன் பாமாலை, கதிரேசன் மாமாலை, அப்புத்தளைக் கதிரேசன் பதிகம், மாரியம்மன் பதிகம், தென்கோவை முடிமன்னன் பதிகம், இறாகலை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி பதிகம் ஆகியவற்றினை இயற்றிப் பதிப்பித்துள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  118700cc). 

ஏனைய பதிவுகள்