சி.அப்புத்துரை (தொகுப்பாசிரியர்). மாவிட்டபுரம்: மாவைப்பதி அமரர் தாமோதரி வயிரவப்பிள்ளை ஞாபகார்த்த வெளியீடு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2004. (மாவிட்டபுரம்: மயூரி அச்சகம்).
64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.
விநாயகப் பெருமான் பற்றிய துதிப்பாடல்களுடன், மாவிட்டபுரம் சித்தி விநாயகர் ஆலய வரலாறு பற்றிய செய்திகளையும் தொகுத்து இம்மலர் ஆக்கப்பட்டுள்ளது. விநாயகனை வழிபடுவோம், பஞ்சபுராணம், விநாயகர் வணக்கம், விநாயகர் அகவல், விநாயகர் போற்றித் திருவகவல், விநாயகர் காரிய சித்தி மாலை, விநாயகர் திருவகவல், பிள்ளையார் கதை, முக்தி அகவல், மாவை சித்தி விநாயகர் ஆலயம் வளர்ந்த வரலாறு, திருக்கோயிலிலும் திருவீதியிலும் செய்யத்தகாத குற்றங்கள், மாவையூர் தாமோதரி வயிரவப்பிள்ளை ஞாபகார்த்த புலமைப்பரிசில் நிதி, குடும்ப விளக்கம் ஆகிய ஆக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36185).