செ.அன்புராசா. மன்னார்: முருங்கன் முத்தமிழ் கலாமன்றம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2018. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரிண்டர்ஸ், 165, வேம்படி வீதி).
xvi, 280 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4609-05-1.
மன்னாரிலிருந்து வெளிவரும் ‘மன்னா’ இதழ்களில் பிரசுரமான 33 கட்டுரைகளின் தொகுப்பாக முன்னர் அதிர்வுகள்-01, 2014இல் வெளிவந்தது. அதன் தொடர்ச்சியாக 34 தொடக்கம் 69 வரை இலக்கமிடப்பட்ட கட்டுரைகளைத் தாங்கி இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், சமூகம், அரசியல், புலம்பெயர் வாழ்வு சார்ந்தவை. அவை தனி மனிதன்-சமூகம் சார்ந்தது, கல்வி சார்ந்தது, ஆளுமை சார்ந்தது, அரசியல் சார்ந்தது, சிறுவர்-பெண்கள் சார்ந்தது, ஆன்மீகம் சார்ந்தது என வகுத்துத் தரப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் முன்னைய அதிர்வுகள்- தொகுதி 1 குறித்த தெணியான், கே.ஆர்.டேவிட் ஆகியோரின் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.