எம்.எஸ்.எம்.அனஸ் (பிரதம ஆசிரியர்), எம்.அல்பிரட் (நிர்வாக ஆசிரியர்). பேராதனை: ஆய்வு: சமூக விஞ்ஞான ஆய்விதழ், 72, பல்கலைக்கழக வீட்டுத் தொகுதி, மீவத்துற, 1வது பதிப்பு, ஜுலை 2000. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(6), 110 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
ஆய்வுத்துறையில் ஈடுபடுவோருக்கான பொதுக் களமாக அமைந்த இவ் இதழ் சமூக விஞ்ஞான பாடத்துறை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள், விமர்சனங்கள் என்பவற்றை தாங்கி வெளிவந்தது. இவ்விதழில் பிரான்சின் அரசியல் முறை (இறைமை பற்றி, குடியரசின் ஜனாதிபதி, அரசாங்கம், பாராளுமன்றம், பாராளுமன்றத்துக்கும் அரசாங்கத்துக்குமிடையிலான தொடர்புகள் பற்றி, ஒப்பந்தங்களும் சர்வதேச உடன்படிக்கைகளும், அரசியல் யாப்புச் சபை, நீதித்துறை அதிகாரிகள், பொருளாதார சமூகச் சபை, திருத்தங்கள் பற்றி, பிரான்சின் ஐந்தாவது குடியரசின் அரசியல் முறை -1958) (அம்பலவாணர் சிவராஜா), அபிவிருத்தியும் தொழில் பயிற்சியும் (மா.செ.மூக்கையா), மனித வள அபிவிருத்தியும் கல்விச் செயற்பாடும் (சோ.சந்திரசேகரம்), குறைவிருத்தி நாடுகளின் பொருளாதார அபிவிருத்தியில் நவீன தொழில்நுட்பப் பயன்பாட்டின் முக்கியத்துவம் (ஜோன் நைஜல்), மனித உரிமைகளும் சுயநிர்ணய உரிமையும் – சர்வதேசச் சட்ட நோக்கு (வி.ரி.தமிழ்மாறன்), காசுப்பாய்ச்சல் கூற்று: ஓர் கண்ணோட்டம் (எம்.அல்பிறட்), இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் அறிஞர் சித்திலெப்பை ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31476. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 013723).