13275 பனுவல்: சமூக பண்பாட்டு விசாரணை(இதழ் 2-2004)

கசங்க பெரேரா (ஆசிரியர்), தா.சனாதனன் (பிரதான தொகுப்பாசிரியர்). கொழும்பு 8: சமூக பண்பாட்டு விசாரணைக்கான கூட்டிணைப்பு, 119A, கிங்ஸ் வீதி, 1வது பதிப்பு, 2004. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், 424A , காங்கேசன்துறை வீதி).

(4), 146 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ., ISBN: 1391-9156.

இவ்விதழில், முன்னுரை (பனுவல் ஆசிரியர் குழு), தமிழரின் உருப்படிமப் பண்பாடு: தமிழர்; பண்பாட்டில் உருப் படிமங்கள் (ICONS) பெறும் இடம் பற்றிய ஓர் உசாவல் (கார்த்திகேசு சிவத்தம்பி), சக நட்சத்திரத்திலிருந்து வழிபடு தெய்வமாக: ஜெயலலிதா ஜெயராமின் பிரபல்ய ஒளிவட்டம் (மூலம்-பிரேமிந்த ஜேக்கப், தமிழாக்கம்- சோ.பத்மநாதன்), கருத்து நிலையும், விக்கிரகவியலும்: ஐந்தாம் குரவராக ஆறுமுகநாவலர் (பாக்கியநாதன் அகிலன்), வன்முறையான கதையாடல்களை வரைதல்: டாக்காவிலுள்ள போர் நினைவிடங்களும் அவற்றில் உறைந்துள்ள நினைவுக் கூறுகளும் (மூலம்-நாயனிக்க முக்கர்ஜீ, தமிழாக்கம்- வண. பிதா ஜே.ஈ.ஜெயசீலன்), பொதுவெளியும் நினைவுச் சின்னங்களும்: அங்கீகரிக்கப்பட்ட ஞாபகத்தினதும் சச்சரவுக்குட்பட்ட ஞாபகத்தினதும் அரசியல் (மூலம்- சசங்க பெரெரா, தமிழாக்கம்-ஏ.ஜே.கனகரட்னா), உலகமொன்றை மீளுருவாக்குதல்: வன்முறை, சமூகத் துன்பம் மற்றும் மீட்சி (ரொட் மெயர்ச்)ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பனுவல் இதழ் 2003 இல் கொழும்பிலிருந்து வெளிவர ஆரம்பித்தது. சமூக பண்பாட்டு விசாரணை கூட்டமைப்பு இந்த இதழை வெளியீடு செய்தது. சமூகம், இலக்கியம், சமயம், பண்பாடு, கல்வியியல், ஆய்வு என பல்துறை சார் அம்சங்களையும் தாங்கி இந்த இதழ் வெளியானது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39462).

ஏனைய பதிவுகள்