13282 சமகால கலை இலக்கியங்களில் பண்பாட்டுக் கோலங்கள்.

சோ.பத்மநாதன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).

vi, 57 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.

வடமாகாண தமிழிலக்கியப் பெருவிழா 2011இல் நடைபெற்றபோது சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு. பண்பாடு, நாடகம்-சில பிரச்சினைகள் (க.ரதிதரன்), புகலிடத் தமிழரது பண்பாடு: சிலஅவதானிப்புகள் (செ.யோகராசா),  இலங்கையில் காணொளி ஊடகப் பண்பாட்டுப் பரவல்: ஒரு பார்வை (ஸ்ரீதயாளன் ஸ்ரீபிருந்திரன்), சமகால கலை இலக்கியங்களில் பண்பாட்டுக் கோலங்கள் (அகளங்கன்), நவீன கவிதைகளில் சமகாலப் பண்பாடு (அருட்திரு தமிழ்நேசன்), செய்தித்தாள்களின் சமகாலப் பண்பாடு (நல்லையா விஜயசுந்தரம்), புனைகதை இலக்கியங்களில் சமகாலப் பண்பாடு (எஸ்.ஏ.உதயன்) ஆகிய ஆய்வுக்கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்