திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி அமைச்சு, கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2010. (திருக்கோணமலை: அஸ்ரா பிரிண்டர்ஸ், 43, திருஞானசம்பந்தர் வீதி).
126 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
இவ்வாய்வுக் கட்டுரைத் தொகுப்பில் ஈழத்து நாவலும் பண்பாடும்- சில அவதானிப்புகள் (செ.யோகராசா), ஈழத்து ஊடகமும் பண்பாடும் (வி.ரி.சகாதேவராஜா), ஈழத்தில் தமிழ்ச் சிறுகதையும் பண்பாடும் (ஏ.எப்.எம்.அஷ்ரஃப்), ஈழத்து நாடகமும் பண்பாடும் (சு.சிவரெத்தினம்), ஈழத்துச் சிறுவர் இலக்கியமும் பண்பாடும் (ச.அருளானந்தம்), ஈழத்துக் கவிதையும் பண்பாடும் (த.உருத்திரகுமாரி), ஈழத்து புகலிட இலக்கியமும் பண்பாடும் (சுப்பிரமணியம் குணேஸ்வரன்), ஈழத்து நாட்டார் இலக்கியமும் பண்பாடும் (எஸ்.முத்துமீரான்), ஈழத்தில் பெண்கள் இலக்கியமும் பண்பாடும் (ஞா.தில்லைநாதன்) ஆகிய ஒன்பது ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.