13284 மட்டக்களப்பு தேசம்: மண்டூர் கந்தசுவாமி கோவிலும் சமயக் கருத்தியலும்: மானிடவியலாளர் மார்க் பி.விற்றேக்கரின் ஆய்வு நூலின் அறிமுகம்.

 க.சண்முகலிங்கம். யாழ்ப்பாணம்: சமூகவெளி படிப்பு வட்டம், 1வது பதிப்பு, 2019. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

65 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-0877-69-0.

மணடூர் கந்தசுவாமி கோவில் பற்றி மானிடவியலாளர் மார்க் பி.விற்றேக்கர் எழுதிய ஆய்வு நூல் மரபுவழி ஆய்வுகளில் இருந்து வேறுபட்டதொரு ஆக்கமாகத் திகழ்கின்றது. மண்டூரில் தங்கியிருந்து கள ஆய்வினை நிகழ்த்திய இவ்வாய்வாளர் மட்டக்களப்பு கச்சேரியில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்களையும் சுவடித் திணைக்கள ஆவணங்கள், பழைய நூல்கள், கட்டுரைகள் என்பனவற்றையும் தமது ஆய்வுக்குப் பயன்படுத்தினார். மானிடவியல் கோட்பாடுகளின் ஒளியில் தரவுகளைப் பரிசீலிக்கும் அவர் மட்டக்களப்பு சமூகத்தின் வாழ்வியல், அதன் சமூகக் கட்டமைப்பு, சமூக உறவுகள், கோவில் நடைமுறைகள், பிணக்குகள் என்பன பற்றி பயன்மிகு கருத்துக்களை முன்வைக்கிறார். ஆங்கில மொழியில் அமைந்துள்ள இவ்வாக்கத்தினை இந்நூல் தமிழில் அறிமுகம் செய்துள்ளது. சமூகவெளியின் சிறுநூல் வரிசையில் இரண்டாவது நூல் இது. அறிமுகம், மானிடவியலாளர் ஒருவரின் பார்வையூடாக மட்டக்களப்பை விளங்கிக்கொள்ளல், மண்டூர் கிராமமும் கோவிலும், சமூக மானிடவியல் நோக்கு, மண்டூர் கந்தசுவாமி கோவில் நிர்வாகமும் கோவில் கருத்தியலும், மட்டக்களப்பில் போடியார்கள், மட்டக்களப்பு வன்னிமைகளும் போடியார்களும், உசாத்துணை நூல்கள்  என ஏழு தலைப்புகளின் கீழ் இந்நூலாக்கம் இடம்பெற்றுள்ளது. க.சண்முகலிங்கம் இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 40 வருடங்களாக சமூகவியல், அரசியல், மானிடவியல், பொருளியல் வரலாறு ஆகிய சமூக விஞ்ஞானத் துறைகள் குறித்து எழுதிவருகிறார்.

ஏனைய பதிவுகள்

12202 – சமூகக் கல்வி: 10ஆம் ஆண்டு.

ஹயசிந்த் தஹநாயக்க, எம்.சீ. த சில்வா, பத்மினீ என்.பெரேரா, ரஞ்சினி சேனாநாயக்க (பதிப்பாசிரியர்கள்), எம்.எம்.றாசீக், திருமதி பீ.சிவகுமாரன், எம்.எச்.எம்.ஹசன் (தமிழாக்கம்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 6வது பதிப்பு, 1992, 1வது பதிப்பு,