இந்திரா சதாசிவம் (மலர் ஆசிரியர்). கொழும்பு: இலங்கைத் தமிழ் மாதர் சங்கம், 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
74 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.
திருமதி தயா மகிந்த இலங்கைத் தமிழ் மாதர் சங்கத்தின் தலைவியாகவும் திருமதி சாந்தி பாலசுப்பிரமணியம் செயலாளராகவும் பணியாற்றிய காலகட்டத்தில் 2009 மே 16 அன்று நடைபெற்ற நூற்றாண்டு விழாவின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இது. சங்கத்தின் பல்வேறு செய்திகள், வாழ்த்துரைகள், அறிக்கைகளுடன் ‘சங்க இலக்கியத்திற் பெண்கள்’ (கா.சிவத்தம்பி), ‘பேசுவதால் பயனில்லை’ (கம்பவாரதி இ.ஜெயராஜா), ‘இலங்கைத் தமிழ் மாதர் சங்கத்தின் முன்னாள் தலைவி/போஷகி கனகம்மா ஆழ்வாப்பிள்ளைக்கு நினைவு அஞ்சலி’ (சாரதா நடராஜா) ஆகிய முக்கிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53898).