செல்வி திருச்சந்திரன் (இதழாசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, 1999. (கொழும்பு: கருணாரட்ண அன் சன்ஸ்).
(3), 6-146 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×14 சமீ., ISSN: 1391-0353.
இந்நூலில் தமிழிலக்கியப் பாரம்பரியத்தில் பெண்பாற் புலவர் ஒளவையார் பாடல்கள் பற்றிய ஆய்வு (அம்மன்கிளி முருகதாஸ்), தலித் பெண்ணியம்: ஒரு விவாதத்திற்கான முன்வரைவு (அ.மார்க்ஸ்), பாலியலும் தேசீயமும்: தேசீய அரசியலில் ‘இலட்சியப்’ பெண்ணின் கட்டமைப்பு (எஸ்.ஆனந்தி), சமூக அரச நிலைகளினூடு வேறுபட்டு விளங்கும் பால்நிலைத் தோற்றங்கள்: ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் (செல்வி திருச்சந்திரன்), நமது வருங்கால சந்ததியினரை அச்சமில்லை என்று ஆர்ப்பரிக்கும் வீரர்களாய் வளர்ப்போம் (செல்வநாச்சியார் பெரிசுந்தரம்), பெண்களும் அரசியலும் (அரசியல் மாணவி), பெண்ணியம் போட்ட பதியங்கள்: அமெரிக்காவில் (சித்து மா. சாலமன்), நவீனத்துவப் பின்னயத்தை விளங்கிக்கொள்ள (செல்வி திருச்சந்திரன்), பெண்மக்கள் விலங்கு (த.வேதநாயகி) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 001103).