செல்வி திருச்சந்திரன் (பிரதம ஆசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
x, 109 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14 சமீ., ISSN: 1391-0353.
இவ்விதழுக்கான ஆசிரியர் குழுவில் தேவகௌரி மகாலிங்கசிவம், மகேஸ் வைரமுத்து, திருமகள் மோகன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இவ்விதழின் முதற் பகுதியான பெண்களின் இடைநிலைப் பிறழ்வும் அவர்களின் பின்னைய இருப்பும் என்ற பிரிவில், சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்களின் தற்போதைய நிலை: ஒரு சில குறிப்புகள் (பார்த்திபன், தயாழினி, தவக்குமாரி, மதிவாணி, சுதாகரன்), இடப்பெயர்வும் பெண்களின் பிரத்தியேகப் பிரச்சினைகளும் (இ.முகுந்தன்), வன்முறையின் கருத்தியல் பண்பாட்டு அடிப்படைகளும் அவற்றின் விளக்கமும்-ஒரு சமூகவியல் நோக்கு (ச.அன்பரசி), பெண் பாலியல் தொழிலாளிகள்: ஒரு சமூகப் பொருளாதார உளவியல் நோக்கு (செல்வராணி), பெண்ணிலைவாதப் பார்வையுடன் நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கும்போது ஏற்படும் பிரச்சினைகள் (தம்பிராசா சாதிக் அமீன்), மணலூர் மணியம்மாள் (தெ.மதுசூதனன்), மறக்க முடியாத மங்கை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் (திருவேங்கிமலை சரவணன்) ஆகிய கட்டுரைகள் உள்ளன. பெண்களும் கலை இலக்கியமும் என்ற இரண்டாவது பகுதியில் கவிதை (தஸ்லிமா நஸ்ரின்), எழுத்துலகில் பெண் எழுத்தாளர்களின் சமூக இயக்கம் (சே.விஜயலட்சுமி), சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கமும் பெண்ணிலைவாதக் கருத்தும் (கௌரீஸ்வரன்), கவிதை என்பது இலக்கியம் மட்டுமல்ல அதுவொரு இயக்கமும் கூட (குட்டி ரேவதி) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 056060).