13320 கால அதிர்வுகள்: அரசியல், சமூகவியல் கட்டுரைத் தொகுப்பு.

 பொன்னையா மாணிக்கவாசகம். வவுனியா: தனேத்ரா வெளியீட்டகம், 7/3, 10ஆம் ஒழுங்கை,  வைரவபுளியங்குளம், 1வது பதிப்பு, டிசெம்பர் 2018. (வவுனியா: பொய்கை பதிப்பகம், கந்தசாமி கோவில் வீதி).

xv, 220 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-71254-0-4.

40 ஆண்டுகள் கடந்தும் ஊடகத்துறையில் நிலைத்து நின்று மக்களின் பிரச்சினைகளை நடு நிலையாக வெளிப்படுத்தி வரும் ஊடகவியலாளர்  பொன்னையா மாணிக்கவாசகம் அவர்களின் ‘கால அதிர்வுகள்” என்ற இந்நூலில், போர்கால வரலாற்றினையும் தமிழர்களின் வாழ்வியலையும் மையமாக கொண்டு தனது கட்டுரையாக்கத்தினை வெளியிட்டு இருப்பது கடந்து வந்த மறக்கமுடியாத வாழ்வின் சம்பவங்களின் ஒரு ஆவணத்தொகுப்பு முயற்சியாகும். பல்வேறு  காலப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவலங்களையும் உணர்வுகளையும் கால அதிர்வுகள் பேசுகின்றது. மக்களின் அபிலாஷைகளை உய்த்து உணர்ந்து, அவற்றை அறிவுபூர்வமாக வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்கவர் ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் என்பதை இக்கட்டுரைகள் நிரூபிக்கின்றன.  நெருக்கடிகளும் உயிர் அச்சுறுத்தல்களும் மிகுந்த யுத்த காலத்தில் கடினமான சூழலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்வதற்காக அவர் அர்ப்பணிப்போடு பணியாற்றியவர். இந்நூலில் இவர் எழுதிய கறுப்பு ஜுலை, யாழ்;ப்பாணம் சென்ற யாழ்தேவி, மனதைவிட்டு அகலாத மேரி கொல்வின், அரசியல் உளவியல் அதிர்ச்சியளித்துள்ள இராஜேஸ்வரன் செந்தூரனின் மரணம், பிரச்சினையின் ஆரம்பமா?, நீதியே நீதி கேட்கும் நிலை, பிரதம நீதியரசர் மொஹான் பீரிசின் நியமனம், ரிசானாவின் மரணதண்டனை, இருமுனைப் போட்டி, நல்லாட்சியிலும் தொடரும் மத வெறுப்புணர்வு, இடைவெளி-விரியுமா சுருங்குமா?, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவிப்பிள்ளையின் வடக்கு விஜயம், நவிப்பிள்ளையுடன் உணர்வுபூர்வமான சந்திப்பு, மாற்றுத் தலைமை சாத்தியமா?, காணவோ உணரவோ முடியாத மனிதாபிமானம், விடுதலை விழாக்களும் வேதனைகளும், பொன்விழா காணும் ஜனாதிபதி சட்டத்தரணி முருகேசு சிற்றம்பலம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் இங்கு தொகுக்கப்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

ᐈ Free Slots On line

Articles Trying to find 100 percent free Gold coins? Finest Casinos That offer Rtg Video game: Get to know Video clips Slots and you will