செபமாலை அன்புராசா. யாழ்ப்பாணம்: அமலமரித் தியாகிகள் வெளியீடு, 1வது பதிப்பு, மார்கழி 2002. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).
xiv, 86 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 21×14 சமீ.
சந்தித்தவையும் சிந்தித்தவையும் என இரு பெரும் பிரிவுகளில் யாழ்ப்பாண மண்ணில் ஆசிரியரின் அனுபவம்சார்ந்ததும் அவதானத்தைப் பெற்றவையுமான நிகழ்வுகள் தொடர்பான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சந்தித்தவை என்ற பிரிவில் நோயாளர் சந்திப்புகளும் குணமடைதலும்/ஆத்மாவின் சத்தம்/ யார் பொறுப்பு?/ தப்பிப் பிழைத்தான்/ஐயோ இப்படி ஆயிற்றே/ எரிகின்ற சமூகத்தின் எரியும் பிரச்சினைகள்/யாழ். போதனா வைத்தியசாலையில்/ ஆஸ்பத்திரியில் கண்காட்சியாம்/நேர்காணல் ஆகிய 10 கட்டுரைகளும், சிந்தித்தவை என்ற பிரிவில் வேதனை தரும் செயல்/நோயாளர் கொழும்பு செல்ல/ ஒட்சிசன் இன்மையால் நிகழும் இழப்புகள்/ புற்றுநோய்ச் சிகிச்சை நிலையம் என இன்னோரன்ன 20 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 138095).