தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் (புனைபெயர்: செங்கதிரோன்). மட்டக்களப்பு: பொது வெளி, 607, பார் வீதி, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
x, 94 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-7264-00-4.
தினக்குரல்- புதிய பண்பாடு இணைப்பிதழில் எழுதிய அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு. இத்தொகுப்பில் 14 கட்டுரைகள் உள்ளன. அவை தமிழ் மக்களுக்கு ஐக்கியப்பட்ட மாற்று அரசியல் சக்தியொன்றின் அவசியம்/தமிழ் மக்களின் இன்றைய அரசியல் தேவை என்ன?/தமிழர் அரசியலைப் பலப்படுத்துவது எப்படி?/தமிழ் மக்களுக்குச் சிலுசிலுப்புத் தேவையில்லை/உத்தேச(புதிய) அரசியல் யாப்பும் தமிழ் மக்களும்/இனப்பிரச்சினைத் தீர்வில் தமிழர்களும் முஸ்லீம்களும்/தமிழர் அரசியல் யதார்த்தத்தை நோக்கிச் செல்ல வேண்டும்/ தெளிவான நிகழ்ச்சிநிரல் இல்லாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு/தீர்வுப் பயணத்தில் சிங்கள மக்களின் மனங்களை வெல்வது அவசியம்/ தமிழ்த் தேசியம் பற்றிப் பேசுவதைவிட தமிழ்த் தேசியத் தளத்தில் இயங்குவதே முக்கியம்/தமிழர் அரசியலில் மாற்றம் தேவை/ தமிழ் மக்களின் கேள்விகளுக்குக் கூட்டமைப்பிடம் பதில் உண்டா?/தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்துச் செய்ய வேண்டியது என்ன?/தமிழ்த் தேசிய அரசியலின் தேக்க நிலை களையப்பட வேண்டும் ஆகிய தலைப்புகளில் சமகால அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக எழுதப்பட்டவை. மட்டக்களப்பிலிருந்த வெளிவரும் ‘செங்கதிர்’ மாத இதழின் ஆசிரியரான செங்கதிரோன் கடந்தகால அனுபவங்களின் மூலமாக படிப்பினைகளைப் பெற்று தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இன்றியமையாததான கருத்தாடல்களுக்கு தன் சிந்தனைகள் மூலம் கணிசமான பங்களிப்பை செய்துவருகின்றார்.