13329 காஷ்மீர்: முடிவற்ற முரண்பாடு.

எஸ்.எம்.ஆலிப். ஒலுவில்: அரசியல் விஞ்ஞானச் சங்கம், கலை கலாசார பீடம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(12), 230 பக்கம், விலை: ரூபா 550., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-99594-1-0.

அட்டாளைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்ட சீனி முஹம்மது ஆலிப் அவர்கள் எழுதியுள்ள இந்நூல் காஷ்மீர் பிணக்கின் தோற்றம், வளர்ச்சி மற்றும் தற்போதைய நிலவரம் போன்றவற்றை மிக ஆழமாக விபரிக்கின்றது. காஷ்மீர் பிணக்கின் வரலாற்றுப் பின்னணி, காஷ்மீர் முரண்பாடும் இந்திய-பாக்கிஸ்தானிய உறவும், சர்வதேச பரிமாணமும் காஷ்மீர் முரண்பாடும், காஷ்மீர் கிளர்ச்சி: சமூக பொருளாதார அரசியல் காரணிகள், காஷ்மீர் மக்கள் எழுச்சியும் சுதந்திர போராட்ட அமைப்புகளும், காஷ்மீரில் மனித உரிமைகளும் மனித உரிமை மீறல்களும், காஷ்மீர் முரண்பாட்டில் சர்வதேச மத்தியஸ்த முயற்சிகளும் சர்வதேச சமூகமும், காஷ்மீர் முரண்பாட்டுக்கு முன்வைக்கப்பட்ட தீர்வுகள், முடிவுரை, காஷ்மீரின் வரலாற்றுக் குறிப்புகள் ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்