க.சண்முகலிங்கம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
(vii), 63 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-577-2.
சர்வதேச உறவுகள் பற்றிய பிரதான கோட்பாடுகளான இயல்புவாதம், பன்மைவாதம், அமைப்பியல்வாதம் என்னும் மூன்று கோட்பாடுகளை விளக்கும் வகையில் அமையும் எட்டுக் கட்டுரைகளைக் கொண்டதாக விளங்கும் இந்நூல், சர்வதேச உறவுகள் பற்றிய கோட்பாட்டு அடிப்படையிலான புரிதலுக்கு உதவுகின்றது. மேற்கண்ட இக்கோட்பாடுகளின் நோக்குநிலையில் விருத்தியும் குறைவிருத்தியும், தேசிய அரசுகளின் முறைமை, அதிகாரச் சமநிலை, போரும் சமாதானமும் ஆகிய விடயங்களும் இக்கட்டுரைகளில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. சர்வதேச உறவுகள் பற்றிய கோட்பாடுகள்-ஓர் அறிமுகம், இயல்புவாதம், பன்மைவாதம், அமைப்பியல் கோட்பாடு, விருத்தியும் குறைவிருத்தியும்: புவி அரசியலில் நவமார்க்சிய நோக்குமுறைகள், சர்வதேச உறவுகளும் தேசிய அரசுகளின் முறைமையும், அதிகாரச் சமநிலை, போரும் சமாதானமும் ஆகிய எட்டு தலைப்புகளில் இக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.