வே.சண்முகராஜா. இரத்மலானை: உமா பிரசுரம், வே.சண்முகராஜா, ஆசிரியர், கொழும்பு இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, மே 1994. (கொழும்பு 13: ஒஸ்கா என்ரபிறைசஸ், 98-B, இரத்தினம் வீதி).
(6), 88 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 24.5ஒ18 சமீ.
இந்நூலில் அரச பாதீடு, மூலதனச் செலவுக்கான உத்தேசங்கள், பாதீட்டின் குறிக்கோள்கள், நடைமுறைச் செலவுகள், வீட்டுத் துறையினருக்கான நடைமுறை மாற்றங்கள், அரசாங்க வரவுசெலவுத்திட்ட வருமான மூலங்கள், வரிக் கணிப்பீட்டு முறைகள், இலங்கையில் நேர்வரிகள், இலங்கையில் மறைமுக வரிகள், வரியில்லாத அரசிறைகள், சமூக நிலுவை, பாதீட்டின் மொத்த வருமானம்-மொத்த வரவு, வரவுசெலவுத் திட்டம் தொடர்பான வினாக்கள், விடைகள், வரவு செலவுத் திட்டம்-சிறுகுறிப்புகள், பாதீட்டுக் கணக்குகள், பொது நிதி தொடர்பான அண்மைக்காலப் போக்குகள், வரவு செலவுத்திட்ட உரை-1994 ஆகிய 18 தலைப்புகளில் அரச வரவுசெலவுத் திட்டம் பற்றிய விரிவான விளக்கம் தரப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23045).