13338 இலங்கையை மீட்டெடுத்தல்: துரிதப்படுத்தப்பட்ட அபிவிருத்திக்கான தொலைநோக்கும் உபாயமும்.

இலங்கை அரசாங்கம். இலங்கை: அரசாங்க வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, மே 2003. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களம்).

(9), 391 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ.

இலங்கையின் அபிவிருத்தி தொடர்பாக வெளிவந்துள்ள அறிக்கை இது. பிரதம மந்திரியாக திரு.ரணில் விக்கிரமசிங்க பணியாற்றிய காலகட்டத்தில் இலங்கைக்கான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கில்  இந்நூல் வெளியிடப்பட்டது. மூன்று பகுதிகளைக் கொண்ட இந்நூலின் முதலாவது பகுதியில் வளர்ச்சிக்கான தொலைநோக்கு என்ற பகுதியல் அறிமுகமும் முன்னுள்ள பாதையும், இலங்கை எதிர்நோக்கும் நான்கு சவால்கள், 10 சதவீத வளர்ச்சியை அடைதல் சாத்தியத் தகவும் சிக்கல்களும், அதிகரித்த  பொருளாதார வளர்ச்சிக்கான உபாயம், துரிதப்படுத்தப்பட்ட வளர்ச்சியும் அபிவிருத்தியும் புதிய அணுகுமுறை ஆகிய அத்தியாயங்களில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவின் பின்னிணைப்பாக பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டக் கூறுகளின் மிகவும் விரிவான விவரணம் தரப்பட்டுள்ளது. இரண்டாவது பகுதியில் வளர்ச்சியுடன் தொடர்புபடுத்தல்: இலங்கையின் வறுமைக் குறைப்பு உபாயம் என்ற தலைப்பின்கீழ், நிறைவேற்றச் சுருக்கம்: அறிமுகம், வறியவர் விபரக் கூற்று, ஆதார பேரினப் பொருளாதாரச் சூழல், முரண்பாடு தொடர்பான வறுமையைக் குறைத்தல், வறியவர்க்கு ஆதரவான வளர்ச்சிக்கு வாய்ப்புக்களை உருவாக்குதல், மக்களில் முதலீடு செய்தல், வறியவர்க்கு ஆதரவான ஆளுகையும் வலுப்படுத்துதலும், விளைவுகள் மீதான மையப்பார்வை: கண்காணிப்பு, மதிப்பீடு, மற்றும் திட்டமிடல் நடைமுறைகள், வறுமைக்குறைப்பு உபாயத்தை நடைமுறைப்படுத்தல் ஆகிய இயல்கள் இடம்பெற்றுள்ளன. இப்பிரிவின் இறுதியில் ஒன்பது பின்னிணைப்புகள் தரப்பட்டுள்ளன. மூன்றாம் பகுதியில் செயற்பாட்டுத்திட்டத் தாயங்கள் விளக்கப்பட்டுள்ளன. இப்பகுதி பேரண்டக் கொள்கைச் சட்டகம் செயற்பாட்டுத் திட்டங்கள், வேலைவாய்ப்பு தொழிலாளர் மற்றும் மனிதவள அபிவிருத்தி, செயற்பாட்டுத் திட்டங்கள், நிதிச் சேவைகள் செயற்பாட்டுத் திட்டங்கள், உட்கட்டமைப்பு அபிவிருத்திச் செயற்பாட்டுத் திட்டங்கள், உற்பத்தித்திறனை விருத்திசெய்தல் செயற்பாட்டுத் திட்டங்கள், பொதுத்துறைச் சீர்திருத்தங்கள் செயற்பாட்டுத் திட்டங்கள் ஆகிய இயல்களில் இவை விரிவாகத் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

15168 அரசாங்கமும் ஆளப்படுவோரும்: அரசியற் கருத்துக்களும் அரசியல் நடைமுறையும் பற்றிய வரலாறு.

ஆர்.எச்.எஸ்.குறொஸ்மன் (ஆங்கில மூலம்). கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், ”சிறிமதி பாயா”, 58, சேர் ஏர்னெஸ்ட் த சில்வா வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1970. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). x,

16013 ஆவணமாக்கலும் அதன் சமூகப்பெறுமானமும்: யாழ்ப்பாணத்து சமய இதழ்களினூடாக ஒரு தரிசனம்.

தி.செல்வமனோகரன். யாழ்ப்பாணம்: நூலகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (சாவகச்சேரி: மிக்கி பிரிண்டிங் ஸ்பெஷலிஸ்ட் A9 வீதி, சங்கத்தானை). (4), 38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.