தமிழீழ நீதி நிர்வாகத் துறை. தமிழீழம்: தமிழீழ நீதி நிர்வாகத் துறை, தமிழீழ விடுதலைப் புலிகள், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1994. (முல்லைத்தீவு: அந்திவானம் பதிப்பகம், புதுக்குடியிருப்பு).
18 பக்கம், விலை: ரூபா 40.00, அளவு: 21.5×14.5 சமீ.
தமிழீழ சட்டக் கோவையிலும், தமிழீழத் திருத்தச் சட்டக்கோவையிலும் தமிழீழ மோட்டார் ஊர்திகள் பதிவுச் சட்டத்திலும் சில விடயங்களை நீக்குவதற்கும் திருத்தஞ் செய்வதற்கும் மேலதிகமான சில விடயங்களைச் சேர்ப்பதற்குமானதொரு சட்டம் இது. இச்சட்டம் 1993ஆம் ஆண்டின் 01ஆம், 02ஆம், 05ஆம் இலக்கச் சட்டங்களின் திருத்தச் சட்டம் என்பதுடன் இதை 1994ஆம் ஆண்டின் 02ஆம் எண் சட்டமெனவும் எடுத்துக்காட்டப்படுகின்றது. 1994ஆம் ஆண்டு 09ஆம் மாதம் 05ஆம் நாள் முதற் செயற்படுத்தப்பட்டது.