13343 சபா ரவீந்திரன் எழுதிய தேசவழமை.

சபா ரவீந்திரன். நயினாதீவு: அமரர் சின்னப்பு வேன்முருகோன்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்த வெளியீடு, 1வது பதிப்பு, மே 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை).

68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

நயினை அமரர் சின்னப்பு வேன்முருகோன்பிள்ளை (10.09.1939-16.04.2009) அவர்களின் மறைவையொட்டி வெளியிடப்பட்ட நினைவு மலர். 2001இல் சபா ரவீந்திரன் அவர்கள் தொகுத்து வெளியிட்டிருந்த ‘தேசவழமை’ என்ற தலைப்பிலான நூலினை இந்நினைவுமலரில் மீளவும் இடம்பெறச் செய்துள்ளனர். டச்சுக்காரர் இலங்கையை ஆட்சிசெய்தவேளை 1704ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத் தமிழர்களிடையே வழக்கிலிருந்த எழுதாச் சட்டங்களைத் தொகுக்கும்படி டச்சுக் கவர்னர் சைமன்ஸ் அவர்கள் உத்தரவிட்டிருந்தார். அவ்வாறு தொகுக்கப்பட்ட ஆவணம் பின்னாளில் தமிழாக்கம் செய்யப்பெற்று 1806ஆம் ஆண்டு 18ஆம் இலக்க ஒழுங்குவிதியில் குறிப்பிடப்பட்டது. 1814இல் பிரதம நீதியரசராகவிருந்த சேர் அலெக்சாண்டர் ஜோன்சன் தேசவழமையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அக்காலத்திலிருந்தே தேசவழமைச் சட்டம் சட்ட நூலில் இடம்பெற்றுவருகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  202672). 

ஏனைய பதிவுகள்

12655 – கிரயக் கணக்கியல்: பாகம் 1.

ரதிராணி யோகேந்திரராஜா. யாழ்ப்பாணம்: ரதிராணியோகேந்திரராஜா, வணிகவியல் துறை, முகாமைத்துவ வணிகவியல் புலம்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம்: உயர்கல்விச் சேவைகள் நிலையம்). 321 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 24.5×19 சமீ.

10841 நாளையும் மற்றொரு நாள்: சிங்கள இனத்துவக் கவிதைப் பாடல்களின் மொழிபெயர்ப்பு.

எம்.சீ.ரஸ்மின். ஆனமடுவ: தோதென்ன வெளியீட்டகம், 1வது பதிப்பு, 2008. (கனேமுல்ல: ஜயந்த் பிரின்ட் கிராப்பிக்ஸ்). x, 62 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 120., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-1848-17-0. இலங்கையில் தமிழ்