13345 நீதிமுரசு 1993.

 எம்.பஸ்லின் வாஹிட் (இதழாசிரியர்). கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஃப்ஸ்டோஃப் வீதி,  1வது பதிப்பு, செப்டெம்பர் 1993. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

(160) பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

இலங்கைச் சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 1993ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலரின்; 30ஆவது இதழ் (04-09-1993) பல்வேறு தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. ஆசிச் செய்திகள், வருடாந்த அறிக்கைகளுடன், எமது அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகளின் இன்றைய நிலை (சிவா திருக்குமரன்), நீதிபதிகளும் பிழை விடலாம் (கி.பாலகிட்ணர்), கம்பனிச் சட்டத்தின் பார்வையில் வாணிப உலகின் நவீன சிற்பிகள் (சின்னத்துரை மயூரன்), குற்ற மனம் இன்றேல் குற்றச்செயல் இல்லை (சுலோசனா துரைராசா), சர்வதேசச் சட்டமும் மனிதாபிமானத் தலையீடும் (வி. ரி. தமிழ்மாறன்), விரும்பியதற்கெல்லாம் ஒப்பந்தம் செய்ய முடியுமா? (பெ.இராஜதுரை), தமிழர் பண்பாடு என்றால் என்ன? (கள்ளியூர் கனக. நடராஜா), மனித உரிமையும் அவசரகால, பயங்கரவாத சட்டங்களும் (மாணிக்கவாசகர் இளஞ்செழியன்), அரச கரும அலுவல்களில் தமிழ் மொழியின் பிரயோகம்: உண்மையான சட்ட நிலைமை (கே.ஜீ.ஜோன்), தவறைப் பொறுத்தவரை: தடைசெய்தலுக்கும் சிறை வைப்பதற்கும் வித்தியாசமுண்டா? (ஆர். யோகேஸ்வரி), காவல்துறையின் கைகளில் சட்டமும் ஒழுங்கும் (இரா.சடகோபன்), முஸ்லிம் சட்டத்தின் கீழான விவாகரத்து (பாஹிமா தாஹா), உடைமை நிவாரணம் (வாசுகி நடராஜா) ஆகிய தமிழ்க் கட்டுரைகளும், அ. இராஜகுலேந்திரன் (மனிதம்), லெனிற் ஜீலியா அமிர்தநாயகம் (நாளை காத்திருக்கு உங்களுக்கென) ஆகியோரின் கவிதைகளும், சி.உஷா நந்தனி (நீறு பூத்த நெருப்பு) யின் சிறுகதையும், The Tort of Conversion and Cheques (V.Ratnasabapathy), Seduction leading astray from the paths of virtue: A Commentary, Thesawalamai a Customary Law (Sumendra Sarath Jayaram), An Interview with Former President HE J.R.Jayawardena  (M. Fazlin Wahid, K. G. John, Sharmila Gunanathan, Bavani Kathirgamathamby), Which is Prohibited: Tax Avoidance or Tax Ewvasion? (Bavani Kathirgamathamby ). Executive Power: Devolution and Divisional Secretaries (N.Selvakumaran), A Position of Women in Islam (Marina Mansoor ), Fast Track Debt Recovery: Debt Recovery (Specilal Provisions) Act No. 2 of 1990, Professional Misconduct: was the Interpretation given in re Arthenayake unreasonable? (Sharmila Cunanathan)ஆகிய ஆங்கிலக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31117).

ஏனைய பதிவுகள்

16227 விதைப் பந்துகள்.

ஏ.எம்.றியாஸ் அஹமட். மருதமுனை 05: பசுமைப் பந்துகள், 224, காரியப்பர் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021 (அச்சக விபரம் தரப்படவில்லை). 36 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 20×14.5 சமீ., ISBN: