13348 நீதிமுரசு 2003.

அன்பு முகைதீன் றோஷன் அக்தார் (இதழாசிரியர்). கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்ரோப் வீதி,  1வது பதிப்பு, மார்ச் 2003. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி).

xviii, 196 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

இலங்கைச் சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 2003ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலரின்; 39ஆவது இதழ் (28-03-2004) பல்வேறு தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. ஆசிச் செய்திகள், வருடாந்த அறிக்கைகளுடன், Unethical Conversions: Law and Practice (C. V. Wigneswaran), Religious Pluralism and tolerance in Islamic Perspective (M. A. M. Shukri),The Right to Religion: A Christian Perspective (F. R. C. Thalayasingan ), The Role of the Attorney General in Public Interest Litigation (Saleem Marsoof ), New Law on Intelectual Property; Novel features (D. M. Karunaratna), When should the Presidential Election be held? (C. V. Vivekananthan), Wakfs Law in Sri Lanka (A. H. G. Ameen), A Few confronted issues of Sri Lanka’s Hybrid Presidential and Parliamentary System (Prasanna Wickramasekara), Law on Abortion: Isn’t it a high time to reform? ( Ajanthini Ramasamy) ஆகிய ஆங்கில ஆக்கங்களும், தீங்கியல் சட்டத்தில் கவனயீனமான பிறழ்பகர்விற்கான பொறுப்புடைமை (G.M.சிவபாதம்), சமூக உரிமைகளை உறுதிப்படுத்தும் பொதுச்சேவைகள் வழங்குகையின் தனியார் தனியார்மயமாக்கம்: ஓர் அரசியலமைப்புசார் கண்ணோட்டம் (கே.அருள்), தன்னிச்சையான குடிபோதை காப்பாகின்ற போது… (A.H.M. திலிப் நவாஸ்), சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டங்களில் பெண்களின் உரிமை (செ.செல்வகுணபாலன்), பதிப்புரிமை சம்பந்தப்பட்ட இணை உரித்துகள்: ஒரு மேல் நோக்கு (நிர்மலன் விக்னேஸ்வரன்), பொலிஸ், ஆயுதப் படையினரின் சித்திரவதைக்குள்ளாகும் ஒரு பிரஜைக்கு எமது அரசியலமைப்புச் சட்டம் பாதுகாப்பளிக்கிறதா?: வேல்முருகு எதிர் சட்டமா அதிபர் மற்றும் சந்திரா பெரேரா வழக்கின் மீது ஒரு கண்ணோட்டம் (U.M. நிஸார்), உள்நாட்டில் இடம் பெயர்ந்தோர் தொடர்பான நெறிமுறை விதிகளும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனித நேயச் சட்டத்தின் சில முக்கிய மூல தத்துவங்களும்: சட்ட மற்றும் சமூகவியல் நிலைப்பட்ட ஒர் ஆய்வு (க.ஜெயநிதி), அரசியலமைப்புக்கான 17வது திருத்தம் (சி.அ.யோதிலிங்கம்), விகிதாசாரத் தேர்தல் முறை (M.M.பஹீஜ்), இலங்கையில் பாலியல் திரைப்படங்களின் அதிகரிப்பும் அதன் விளைவும் (ஆ.சு.ஆ. தைலமி), வேண்டாம் சித்திரவதை (ரிப்கா அன்வர்), சட்டத்தரணிகள் பொய்யர்களா? (அன்புமுகைதீன் றோஷன்), வலுப்பிரிவினையும் அதன் பிரயோகமும் (ஜெ.கஜநிதிபாலன்), நாடொன்று அங்கீகரிக்கப்படுவதற்கான தேவைப்பாடுகள் (தனபாலசிங்கம் ஜனகன்), சட்ட அறிவின் அவசியத் தன்மை (அன்ரோ அமலவளன் ஆனந்தராஜா), சூழல் தொடர்பான தனியாட்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நீதித்துறை ஆற்றியுள்ள பங்களிப்பு (அனுறஜீ செல்வநாதன்), இலங்கையின் தேர்தல் வன்முறையும் தேர்தல் ஒழுங்கு விதிகளும் (H.M.M றைஹான்), கீழைத்தேய ஜனநாயகமும் உலகளாவிய நடைமுறைகளும் (S.M.N.S.மர்சூம்), நவீன காலத்துக்கு முன்னர் தமிழரிடையே நிலவிய “அறிவுமுறைமை” பற்றிய சில குறிப்புக்கள் (கார்த்திகேசு சிவத்தம்பி), கலையும் கவிதைகளும்: அல்லாமா இக்பாலின் பார்வை (M.S.M.அனஸ்), தமிழ்வழிக் கல்வி (சுந்தர ராமசாமி), அந்த ஒலி உங்களுக்கு கேட்கிறதா? (நா.சோமகாந்தன்), அப்பா இல்லாத ஊரில் (உமா வரதராஜன்),விண்மட்டும் தெய்வமன்று மண்ணும் அஃதே-கவிதை (இ.ஜெயராஜ்), காது மின்னி – கவிதை (சோலைக்கிளி), வயல்காரன் – கவிதை (ஆ.ர்.ஆ.அஷ்ரப்),  மாதவி – கவிதை (வேதாந்தி), விட்டில்கள் – கவிதை (கனிமொழி கருணாநிதி), இதுதான் ஜனநாயகம்- கவிதை (S.A.M.உபைதுல்லாஹ்), மகாகாலம் வியாபித்த அழியாத் துயர் – கவிதை (அன்புமுகைதீன் றோஷன்), உதயத்தை நோக்கி (அனுறஜீ செல்வநாதன்), மெல்லத் தமிழினிச் சாகும்…. (ஜெயதேவி சிவானந்தன்) ஆகிய தமிழ்ப் படைப்பாக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33038).

ஏனைய பதிவுகள்

ᐅ Merkur

Content Swintt: Tagesordnungspunkt Swintt Casinos and Spielautomaten Das Sei Das Beliebteste Merkur Partie? Angeschlossen Spielbank Hydrargyrum Spiele Geringe Knurren Einzahlen Und Maklercourtage Erhalten Microsoft erwägt

Должностной веб-журнал казино 1xBet: оформление, букмекерская контора, маневренная версия доступна

Content Что же делать, если веб-журнал заблокирован, как приобрести введение ко бк Как подмести аккаунт? Впоследствии проверки особы клиенту возвращают его страничку. Отклики про это