13358 இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு.

இலங்கை அரசாங்கம். கொழும்பு: பாராளுமன்ற செயலகம், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு, 1வது பதிப்பு, டிசம்பர் 1988. (கொழும்பு: அச்சுத் திணைக்களம்).

x, 230 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு 24×17 சமீ.

இவ்வரசியலமைப்புச் சட்டப் பதிப்பானது 1988, டிசம்பர் 20ஆம் திகதிவரையிலான திருத்தங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வரசியலமைப்புப் பதிப்பு, மக்களும்;-அரசும்-இறைமையும், பௌத்த மதம், அடிப்படை உரிமைகள், மொழி, ஆட்சித்துறை-பகிரங்க சேவைகள், சட்டமன்றம்- பாராளுமன்றம், சட்ட மன்றம்- நடவடிக்கை முறையும் தத்துவங்களும், பிரசாவுரிமை, அரச கொள்கையின் வழிகாட்டிக் கோட்பாடுகளும் அடிப்படைக் கடமைகளும், ஆட்சித்துறை-குடியரசின் சனாதிபதி, ஆட்சித்துறை- அமைச்சரவை, நீதித்துறைச் சுதந்திரம், மேனிலை நீதிமன்றங்கள், உயர் நீதி மன்றம், சட்ட மன்றம் -அரசியலமைப்பைத் திருத்துதல், மக்கள் தீர்ப்பு, வாக்குரிமையும் தேர்தல்களும், நீதித்துறை, நிர்வாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர், பொது, நிலைமாறுகால ஏற்பாடுகள், பொருள்கோடல், நீக்கம், அரசியலமைப்பினைப் பிரசித்தஞ் செய்தல், அட்டவணைகள் (9) ஆகிய இருபத்திநான்கு தலைப்புகளின் கீழ் 172 உறுப்புரைகளின் வழியாக இந்த அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24634).

ஏனைய பதிவுகள்

In which Sports betting Try Legal

Articles Internet poker Arizona Gambling enterprise Legislation Gambling Nfl London Uk Betting Syndicate: Court Or perhaps not How Is online Gaming Managed Inside the Saudi